தேசக்கொடியின் வீழ்ச்சி


பார் புகழ் பாரத தேசக்கொடி
.          பார்பவர் இகழ்ந்திட வீழ்ந்த தடி
பார்பணன் பரையனின் பிரி வினைகள்
.           முந்தி  இருந்தது மானிட வழிமுறையில்
கொடி கம்பத்தில் பறந்திடும் மூவர்ணம்
.           அதை கண்டதும் ஜாதிகள் ஓர்வர்ணம்
.                             ஆனால்

கொடி காத்தகுமரனின் பெருமை இன்று
.             குடி முழ்கிபோனது ஏன்தானோ???
சிறை சென்று வென்றிட்ட பெரியோர்கையில்
 .             ஏற்றி பறந்திட்ட  தேசக்கொடி  இன்று
சிறை செல்ல வேண்டிய கா(பாவி)கையில்
.              பாடு படுவது ஏன்தானோ ???


தேசக்கொடி தனை போற்றிடுவோம்
என்றும் உரிமையுடனே ஏற்றிடுவோம்

Comments